Thursday, April 23, 2015

மனிதன்



மனிதன் இந்த உலகின் படைப்பு...
பல்லாயிரக்கணக்கான உயிர்களின் மத்தியில் உருவான அற்புதபடைப்பு... 
மனிதன் பரிமாண வளர்ச்சியில் வந்தானா?? அல்லது science fiction படி வேறு ஒரு கிரகத்தில் இருந்து விதைக்கப்பட்டானா ?? பல அனுமான்கள் பல விவாதங்கள் தொடர்ந்தாலும் மனிதன் இந்த பூமியில் வந்து 200000 வருடங்கள் ஆகி விட்டது.

மனிதனை பிற உயிரினைங்க்களில் இருந்து வேறு படுத்துவது அவர்களின் ஆறாம் அறிவு தான் ஆனால் அதே அறிவு தான் அவனை இந்த பூமியின் வளங்களை அழிக்கும் எமனாகவும் ஆக்கியது.

சரி முதலில் இந்த உலகில் ஒரு உயிர் வாழ அடிப்படை தேவை என்ன ????
1. மூச்சி காற்று
2. நீர்
3.உணவு
இந்த மூன்றும் கிடைத்தால் தான் எந்த ஒரு உயிரினமமும்  உயிர் வாழ முடியும். இதற்கு தான் இங்கு அனைத்து உயிரினங்களின் அத்தனை போராட்டமும்.

சரி இந்த மூன்றும் கிடைத்த பிறகு அடுத்த தேவை என்ன??
காமம்(Sex) அல்லது இனப்பெருக்கம் இது ஒவ்வொரு உயிரினதுக்கும் பொருந்தும் இவை அனைத்தும் உடலியற் தேவைகள் Physiological needs இதற்கும் அடுத்து????

பாதுகாப்புத் தேவை
பாதுகாப்புத் தேவை (Safety needs) இது உடலியற் தேவை பூர்த்தியானது தோன்றும் தேவையாகும்.இதில் தொழிலிற்கு பாதுகாப்பு,உயிருக்கு பாதுகாப்பு,உடமைக்கு பாதுகாப்பு,வன்முறை அற்றஇடம் போன்றன உள்ளடங்கும்.

சமூகத் தேவை
படிக்கட்டமைப்பில் 2 வது கட்டம் பூர்தியாக்கப்பட்டதும் தோன்றுவது சமூகத் தேவை ( Love/Belonging needs) ஆகும்.இத் தேவைகள் உணர்வுபூர்வமான உறவுமுறைகளான நண்பர்கள்,துணை,குடும்ப ஆதரவு என்பவற்றின் தேவையினை வேண்டிநிற்கும்கௌரவத்தேவைசமூகத்தேவைகள் நிறைவுற்றதும் தோன்றும் அடுத்த தேவையாகும்.கௌரவத் தேவை (Esteem needs) உளவியல் சார்பனது.பிறரால் மதிக்கப்படுதல்,உயர்பதவியினை விரும்புதல்,சொத்துக்கள்,வாகனங்கள் வைத்திருக்க ஆசைப்படுதல் போன்றனவாகும்.

தன்னலத் தேவை
மனிதனுக்கு கடைசியாகத் தோன்றக்கூடிய தேவை தன்னலத் தேவை (Self-actualization) ஆகும்.இதன் பின் அவனுக்கு தேவைகள் இருக்காது

இதை தான் மாஸ்லோ கோட்பாட்டில் கூறுகின்றார்

உடலியற் தேவைகள் கிடைத்த பிறகு வரும் தேவைகள் அனைத்தும் உளவியல் தேவைகள் இந்த தேவைகளுக்கு தான் மனிதனை ஆறாம் அறிவு அனைத்து சித்து வேலைகளையும் செய்ய தூண்டுகிறது.

சரி இதில் மதம் எப்படி வந்தது???
பயத்திலிருந்தா ???